கல்குருவி - Guy de Maupassant
This short story was written by famous French writer Guy de Maupassant and has been translated in Tamil by famous Tamil writer Charu Nivedita.
ஒரு பறவைக் கூட்டம். அதில் ஒரே ஒரு பறவை மட்டும் கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லும் போது கீழே பாறையின் மீது ஒரே ஒரு பறவை மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அதன் அருகே செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறது. முதல் முதலாகப் பார்க்கப் போகிறோம்; ஒரு பூவையும் எடுத்துச் செல்வோம் என்று எங்கெங்கோ தேடி அலைந்து ஒரு அற்புதமான மலரை எடுத்துக் கொண்டு அந்தப் பறவையிடம் சென்றது. மலரை எடுத்துக் கொடுத்தது. ஆனால் அந்த ஒற்றைப் பறவை நகரவே இல்லை. காத்திருந்து காத்திருந்து பார்த்து விட்டு தன் கூட்டம் திரும்பி வருவதைப் பார்த்து உயரே எழுந்து சேர்ந்து கொண்டது.
ஆனாலும் இப்போதும் அடிக்கடி அந்த அசையாத ஒற்றைப் பறவைக்கு ஒரு மலர்க் கொத்தைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. பாவம், அந்தப் பறவைக்கு அந்த அசையாத பறவை ஒரு கல்பறவை என்று தெரியவில்லை.